05 August, 2009

தமிழில் முதல் முறையாக (Nirmala school days)

இணையத்துல மீனாவுடன் பேசிகிட்டு இருக்கும் போது , ஏரன் ஹாய் மெசேஜ் அனுப்ப, ரொம்ப நாளைக்கு அப்புறம் பேச ஆரம்பித்தோம்.

சில நிமிடங்களில் என் கைபேசி எண் வாங்கி சிங்கப்புரிலிருந்து கூப்பிட்டான்.இப்ப மெரைன் இஞ்சினீயர்-யா உலகம் பூரா சுத்திட்டு இருக்கான். முழு பேரு ஏரன் அலோசியஸ் பெர்னாண்டோ. ரொம்ப வித்தியாசமான நீளமான பேரு. அதுவே அவனுக்கு ஒரு கூடுதல் வசீகரத்தை குடுத்தது. அப்புறம் அவன் பால் வடியும் முகம்.

ஏரனை எனக்கு 1993 லிருந்து தெரியும். எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தான். நல்ல உயரம், அதைவிட நல்ல பருமன், அப்பவே மீசை எல்லாம் இருக்கும். பள்ளியில் சேர்ந்த சில மாதங்களில் மிக பிரபலம். ஹெச்சம் லேந்து சின்ன புள்ளைங்க வரை ஏரன்-னா தெரியும். முரட்டு பய ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப மென்மையான செண்டிமெண்டல் டைப். முன் கோபம், அடி தடி எல்லாம் உண்டு. ரொம்ப நல்ல கிரைச்பிங் பவர் ஆனா அதே அளவுக்கு படிப்புல அலட்சியம். தமிழ் செகண்ட் பேப்பர் பரீட்சைக்கு அறை மணி நேரம் முன்னாடி என்கிட்டே, அறிஞர் அண்ணா தமிழ் சமுதாயத்த பத்தியும், சொசியாளிசத்தை பத்தியும் என்ன சொல்லி இருக்கார்னு அரைகுறையா கேட்டுகிட்டு போய், நல்ல நாலு பக்கத்துக்கு கட்டுரை எழுதிடுவான். தமிழ் கையெழுத்து தான் அவ்வளவா சகிக்காது. அப்பவே தமிழ் சுந்தரி மிஸ் சொல்லுவாங்க, "நீ ஏண்டா நாப்பது மார்க்-க்கு பரீட்சை எழுதி, முப்பத்தி அஞ்சு வாங்குறே-ன்னு " எனக்கு எட்டவுது-லேந்து பத்தாவது வரைக்கும் ரொம்ப நெருக்கம். எப்பவும் கூடவே தான் சுத்துவோம், ரெண்டு பேரும் முற்றிலும் வேறுபட்ட குணம். அவன் முரடன்னா நா சாது, பயந்தாங்கோலி. அவன் குண்டன்-னா நா அப்போதெல்லாம் முருங்ககாயிக்கு சட்டை போட்டு விட்ட மாதிரி இருபேன். எல்லாம் "லாரல் அண்ட் ஹார்டி" ன்னு தான் சொல்லுவாங்க. ஏரன் பற்றி நினைவுகளை அசை போட்ட போது நினைவில் நிழலாடியாயவை சில,

அவனை உசுபேத்தி எஸ்.பி.எல் பதவிக்கு போட்டி போட வச்சு , நாலே நாலு பேரு மட்டும் வோட்டு போட்டது. அந்த நாலு பேருல, நானும் என் தம்பியும் சேத்தி.

ஒரு கால கட்டத்துல, ஒவ்வொரு பி.டி பீரியட்லயும் , "பே பே" தான் அடிகொண்டிருந்தோம். ஆடிக்கொண்டிருந்தோம்-னு சொல்றத விட ஆடிக்கொண்டிருந்தார்கள்-னு தான் சொல்லணும். அடி வாங்க பயந்துகிட்டு நான், லேனா எல்லாம் பார்வையாளர்களை மாறி இருந்தோம். "பே பே"-இல் ஏரன் உட்பட திருமுருகன், முதுகிருஷ்ணன், வெங்கடேஷ் எல்லாம் ஸ்டார் ப்லேயர்ஸ். இன்னைக்கும் எனக்கு பந்தால் முதுகில் அடித்து கொண்டு, பழி தீர்க்க மாறி மாறி அடித்து மகிழ்வடையும் அந்த புரியாத விளையாட்டில் உடன்பாடு இல்லை. அப்படி ஒரு மதிய நேர பே பே விளையாட்டில் கோபி-னு ஒரு எலி பய மேல ஏரன் விழுந்து விட அவன் மயக்கமையிட்டான். அப்போது, என்னிடம் வந்து ஏரன் "அவன் செத்து போயிட்டா என்னய சிறையில போற்றுவாங்களா?" அப்பாவியா கேட்க நானும் "ஸ்கூல் பசங்களுக்கு எல்லாம் சீர்திருத்த பள்ளி இருக்குனு" ஆறுதல் சொல்லி அறிவாளி தனமா அவனை தேற்றினேன். எங்கள் இந்த தொடரும் நடுவே கோபி மயக்கம் தெளிஞ்சு பந்தோட ஓடி வந்து கொண்டிருந்தான், ஆரானை பழி வாங்க......வாழ்க "பே பே".

"சொட்ட தாங்கி"னு ஒரு ஹிஸ்டரி வாத்தியாரு இருந்தாரு. வெட வெடனு எலும்பா இருப்பாரு. பூனை மீசை வச்சு ஒரு விதமான ஹஸ்கீ வாயீசில தான் பாடம் நடத்துவாரு. பே காங்டினுஎது பாடம் எடுப்பாருன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆறாவது படிக்கும் போது ஸ்கூல்- சேர்ந்தாரு, சிதம்பரம் பக்கதுல கிராமத்துலேந்து தினமும் வருவாரு. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு பழைய சைகிள உருடிகிட்டு வருவாரு. 1990 களிலிலும் பழைய எண்பதுகளில் அணியப்பட்ட பெரிய காலர் வைத்த டைட் சட்டை தான் அணிந்து வருவாரு. ஸ்கூல் பூர அவர பற்றி ஒரு பரபரப்பு நிலவிகொண்டே இருந்தது. வந்த சில மாதங்களில் அவருடைய அடி பிரபலமையிடிச்சு . பசங்க பொண்ணுங்கன்னு வித்தியாசம் பாக்காம பிடரியில் அடிப்பாரு. அடி வாங்கறவனுக்கு அவமானமாகவும், மற்றவர்களுக்கு வேடிக்கையாகவும் இருந்தது. இன்னொருத்தன் அடி வாங்கும் போது, சிரிச்சு மாட்டிகிட்டா ரெண்டு மடங்கு அடி விழும். பொதுவா பீ.டி வாத்தியார் தவிர எல்லாம் மிஸ் தான். அதனால நாகரீகமா, பெஞ்சு மேல ஏறி நிக்கறது, முட்டி போடுதல், க்ரௌண்ட மூணு முறை சுத்தி வர்றது , வெயில்ல ஒரு மணி நேரம் நிக்கறது, இல்லேன்னா அதிக பச்சம் ஸ்கேல வச்சு கையில ரெண்டு அடி வாங்கிகிட்டு இருந்த எங்களுக்கு எல்லாம் ஒரு cultural shock ஆயிடிச்சு. வெவ்வேறு வகுப்புகளில் அவரிடம் அடி வாங்கியவர்களின் கதைகளே எங்கள் மதிய நேர பேச்சுகளில் நிறைந்து இருந்தன. இந்த கதைகளின் ஊடே, அவரின் பட்ட பெயரும், காற்றில் புகை போல பரவி விட்டுருந்தது. அதான் "சொட்ட தாங்கி சார்".அவர் பேரு கனகசபை-னு ஸ்கூல்-ல பத்துல ரெண்டு பேருக்கு தான் தெரிஞ்சிருக்கும். எதுவா இருந்தாலும் டு எனப்படும் பின் மண்டையில் விழும் அடி, சில பொறுப்புள்ள பெற்றோர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருந்தது .


"பெற்றோர் - ஆசீரியர்" சங்கமெல்லாம் இல்லாததல சொட்ட தாங்கி ஸார் ஒரு முடி சூட மன்னன் போல உலவிக்கித்டு இருந்தாரு.

முதல் முறையாக எட்டாவதில் எங்களுக்கு பாடம் எடுக்க வந்தாரு. அதுவரை பிரமிப்பா இருந்தா அவரது செயல்கள், நடைமுறையா மாறிவிட்டிருந்தது. கால் பரீட்சை பேபர் குடுத்த போது, எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி, என்னானு கேட்டா...........

(to be continued.........)

6 comments:

Vjsagar said...

kankolla kaatchi & negizha cheium anubavam, un inaia kuripil tamil ai padithathil... vazhga tamizh valarga un ezhuthu....vijaysagar

Vjsagar said...

a very sweet reading experince after a long time.. thank u nagz

Nagappan said...

Thanks Sagar, your comment gives me a lot of confidence to continue writing in Tamil.

microram said...

dear prem I could find time today to read your blog

microram said...

your writing reminds me Sujatha
you can write more on your days in japan

urskarthikn said...

மச்சி நமது பள்ளி நினைவுகளை கண் முன் நிறுத்தியதற்கு மிக்க நன்றி....

About Me

My photo
Baroda, Gujarat, India
Nagappan Ramanathan Baroda, Gujarat, INDIA "My blog will let you know about me . . am too humble to talk about myself . ."

Followers